Leave a comment

சிரமத்திற்க்கு மன்னிக்கவும்


வெளிச்சம் மாணவர்களின் வணக்கங்கள்,
வெளிச்சம் மாணவர்களின் அண்மை நிகழ்வுகள் அனைத்தும்
கீழ்காணும் முகவரியில் பதிவு செய்யப்படுகிறது….

சிரமத்திற்க்கு மன்னித்து…எமக்கு வழிகாட்டவும்…
http://velichamstudents.blogspot.com/

நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்

Advertisements
Leave a comment

என்று மாறும் இந்த நிலமை


மற்றவர் வாழ்வில் வெளிச்சம் ஏற்ற இணைவோம் ….. வெளிச்சம் மாணவர்கள்

Leave a comment

புத்தக வெளியீட்டு விழாவில் வெளிச்சம்


விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சி இணை இயக்குனர் திரு.ஈஸ்வர சந்தான மூர்த்தி அவர்கள் கவிஞராக உருவகமான நிகழ்வை வெளிச்சம் மாணவர்கள் பகிர்ந்து கொள்கிறோம்.. புலம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ஐந்தாறு வகுப்பறைகளும் பத்துபதினைந்து காக்கைகளும் என்கிற கவிதை புத்தக வெளியீட்டு விழாவினை மிக நேர்த்தியாகவும், அழகாகவும் புத்தக கண்காட்சியில் அமைக்கப்பட்ட புலம் பதிப்பகத்தால் அமைக்கப்பட்டிருந்த நிலையத்தில் நிகழ்ந்த நிகழ்வில் விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா இயக்குநர் திரு ஆண்டனி அவர்களும், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களும், தொலைக்காட்சி தொகுப்பாளர் திரு.கோபிநாத்.எழுத்தாளர் அழகியபெரியவன்…திரு.சாய்ராம்.இவர்கள் வரிசையில் வெளிச்சம் மாணவர்கள் சார்பாக வெளிச்சம் செரீன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்.. இந்த நிகழ்வின் பதிவுகளை உங்களுக்கு சமர்ப்பிக்கிறோம்…

Leave a comment

வலிகளை உணர்தவர்கள் மட்டுமே வழிகாட்டியாக முடியும் – திரு.சந்திராயன் மயில்சாமி அண்ணாதுரை


வெளிச்சம் மாணவர்களின் கல்விப்பணியை தங்களுக்கு மகிழ்ச்சியோடு தொடர்ந்து தெரியப்படுத்திவருகிறோம்.. ஏனெனில் உங்கள் வழிகாட்டுதலில் தான் நாங்கள் வளர்கிறோம்.. இந்த பணியில் எங்கள் பணியை பாராட்டி 2009 ம் ஆண்டு நிலவுக்கு சந்திராயன் விண்கலம் அனுப்பிய அறிவியல் தமிழர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களை சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது இந்த இணையத்தின் வாயிலாக.. அந்த சந்திப்பின் நினைவுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்…

வெளிச்சம் மாணவர்களின் கல்வி பயணத்தில் இந்த சந்திப்பை ஒரு அங்கிகாரமாகவே கருதுகிறோம்...

இருவாரங்களுக்கு முன்பு சென்னை வேல்ஸ் பல்கலைகழகத்தில் நடைபெற்ற 18வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கல ந்து கொள்ள வருகை தந்திருந்த அவரின் சார்பாக அவரது நண்பர்கள் வெளிச்சம் மாணவர்களிடம் இந்த தகவலை சொன்னபோது நாம் நம்மை கிள்ளிகூட பார்த்தோம்.ஏதுமற்ற நிலையில் நிற்கும் நம் பணியை மதித்து அழைத்தது 2018ல் நிலவிற்க்கு சுற்றுலா செல்ல சந்திராயன் கையருகே நிலவு அய்யா.மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் என்பதால்…

சரியாக மாநாடு முடித்த சிறிது நேரத்தில் நம்மை தொடர்புகொண்ட அரிமா டாக்டர்.சிவக்குமார். உங்களை முதலில் அய்யா சாப்பிடசொன்னார் என சொன்னபொழுது காலையில் இருந்து சாப்பிடாமல் இருந்த மாணவர்களின் பசியை அறிந்த தாய்தான் நமக்கு ஞாபகத்தில் நிற்க.. நாம் நகர்ந்தோம் சாதாரணமானவர்கள் கூட கொஞ்சம் அலட்டிகொள்ளும் காலத்தில் எதார்த்த மனிதர்களைபோல் எளிமையாய் புன்னகையோடு நம்மை வரவேற்றார். முன்பின் தெரியாத மாணவர்கள் அவரின் எளிமையை கண்டு ஆச்சிரியப்பட்டார்கள்..

சாப்பாட்டை முடித்ததும் வேல்ஸ் பல்கலைகழகத்தின் நூலகத்தில் சரியாக 2.30 மணிக்கு நம் மாணவர்களை சந்தித்தார்..

வெளிச்சம் மாணவர்கள் மற்ற ஏழை மாணவர்களின் வாழ்வில் ஏற்றும் செயல்பாடுகளை வெளிச்சம் செரின் அவர்கள் விளக்கினர். அதனை தொடர்ந்து கல்வியை கனவாக கண்டிருந்த மாணவர்களின் கனவு நனவான மாணவர்கள் கல்விக்காக பட்ட வலிகளை கூர்ந்து கேட்டார்..26 ஆறு நாட்களாக கல்லூரிக்கட்டணம் செலுத்த முடியாத மருத்துவம் மற்றும் நர்சிங் மாணவியர்கள் 6 பேரை வலியை கேட்ட அவர் நிச்சயம்என்ன செய்ய வேண்டுமோ அதை நாம் செய்வோம்.. நான் படிக்கும் காலங்களில் நான் பட்ட அதே கஸ்டங்கள் இனியும் தொடராமல் தடுத்தாக வேண்டும் என வருத்தப்பட்டு இனி நாம் பேசாமல் செயல்பாட்டினை செய்வோம் என்றார்..

வெளிச்சம் மாணவர்களின் செயல்பாடு மிகச்சிறப்பாக இருக்கிறது. இது இந்தியாவில் கல்விக்கான மக்கள் இயக்கமாக வளரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது என்று வாழ்த்தினார்..

இந்த சந்திப்பிற்க்கு பின் தீடீரென தன் தந்தையை இழந்த காரணத்தினால் MBA கல்லூரி படிப்பை தொடரமுடியாமல் தவித்த மாணவி முபிதா பாத்திமா என்கிற மாணவிக்கு ரூபாய் 20000 காசோசலையை வழங்கினார்கள்..

ஒரு மணி நேர உரையாடலில் வெளிச்சம் மாணவர்களின் வலிகளை உணர்ந்தவராய் தன்னுடன் வந்திருந்த பேசியபடி நகர்ந்தார்..

வலிகளை உணர்தவர்கள் மட்டுமே சிறந்த வழிகாட்டியாக இருக்கமுடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளில் இவரும் இவர் நண்பர்களும் அடங்குவர் ..

மொத்த படங்களை பார்க்க:

Mylsamy Annadurai with Velicham Students
Leave a comment

காலமெல்லாம் காத்திருப்போம்… வேலைக்காக


மிழகம் முழுவதும் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 62 லட்சம் பேர், தங்கள் கல்வித் தகுதிகளை பதிவு செய்துவிட்டு, அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் இந்த திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில், பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கல்வித்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை ஆகிய துறைகளில் அதிகளவில் புதிய பணி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. தி.மு.க., அரசு அமைந்தபின், கடந்த நான்கரை ஆண்டுகளில் ஐந்து லட்சம் பேருக்கு அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அப்படியிருந்தும், வேலை வாய்ப்புக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை மள மளவென உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு வரை, வேலை வாய்ப்புக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை 55 லட்சத்திற்குள் இருந்தது. ஆனால், கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி 62 லட்சமாக உயர்ந்து உள்ளது. இதில், பெண்கள் எண்ணிக்கை மட்டும் 29 லட்சமாக உள்ளது. மார்ச் மாதத்திற்குப் பின், மே மாதத்தில் பள்ளி பொதுத்தேர்வு முடிவுகள், அதன்பின் ஆசிரியர் தேர்வு முடிவுகள் என, பல்வேறு படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில், எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்பர். ஆனால், இந்த விவரங்கள் அரசின் புள்ளி விவரத்தில் சேர்க்கப்படவில்லை. மார்ச் 31ம் தேதி வரையான புள்ளி விவரங்களை மட்டும், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. ஆதிதிராவிடர் பிரிவில், இன்ஜினியரிங் பட்டதாரிகள் மட்டும் 12 ஆயிரத்து 449 பேர், அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். பழங்குடியினர் பிரிவில் 186 இன்ஜினியரிங் பட்டதாரிகளும் அரசு வேலைக்காக காத்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினமலர்

Leave a comment

கருகிடும் முதல் தலைமுறை மாணவர்களின் கல்லூரி கனவுகள்


வெளிச்சம் மாணவர்களின் போஸ்டரின் வலிகள்.. விளக்கிய தினமலர் செய்தி

ஊரிலேயே,வீட்டிலேயே பஸ்ட் படிச்சி வேலைக்கு போனோம்.அதோடு சரி எல்லாம் மறந்து போனார்கள் எங்கள் போன தலைமுறை…ஆனால் இப்போதிய மாணவர்களின் நிலை மிக மோசமாக போனது…

கடந்த வாரம் வெளிச்சம் மாணவர்களால் சென்னையெங்கும் ஒருவருடத்திற்கு பிறகு மீண்டும் ஒட்டப்பட்ட போஸ்ட்டரின் வலியை 29.12.2010 தினமலர் செய்திதாள் செய்தியாக்கியது…தினமலருக்கு நன்றி சொல்ல கடமை பட்டவர்களாய் முதல்தலைமுறை ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக வெளிச்சம் மாணவர்களின் போராட்டத்தினை உங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயமிருக்கிறது…

மாணவர்களின் கல்வியை காப்பாற்றுவதற்காக வெளிச்சம் மாணவர்களால் முதல் தலைமுறை மாணவர்களின் படிப்பைப் பாதுகாக்க “திரைப்பட நடிகர் ஜெயம் ரவி” அவர்களோடு சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தியது அதற்கும் பலனடையவில்லை..ஆனால் கல்லூரிகள் கல்விக்கட்டணம் செலுத்தமுடியாததால் மாணவர்களை படிக்க விடாமல் கல்லூரியை விட்டு வெளியே அனுப்ப இருக்கிற சூழலில் வேறு வழியில்லாமல் 40 வெளிச்சம் மாணவர்கள் தமிழக காவல்துறை இயக்குநரிடம் தமிழகம் முழுக்க உண்டியல் குலுக்கி நிதி வசூலிக்க அனுமதி வாங்கினோம்..அதன்படி சென்னை முழுவதும் உண்டியல் ஏந்தினோம்..இச்செய்தி “தமிழக அரசியல்”,”டெக்கான் குரேனிக்கல்”,”என்.டி,டிவி” போன்ற ஊடங்கங்களிலும் வெளியானது..

அதன் பின் தமிழக அரசால் முதல் தலைமுறை ஏழை மாணவர்களுக்கான இலவச உயர்கல்விக்கான அரசாணை வெளியிடப்பட்டது.GO_First_Graduate

கல்விக்கட்டணம் மட்டுமல்லாமல் ஏழை மாணவர்களின் அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்க வேண்டும் எனவும்..
நாம் மேலும் போராடினோம்.. நம் பயத்தினை தினமணி நாளிதழ் செய்தியாக்கியது.. படிக்க

இன்னும் ஓர் கோரிக்கை முதல்வரய்யா….என்கிற தலைப்பில் நாம் எழுதிய கோரிக்கை மனுவினை உங்களிடம் வைக்கிறோம்..https://velichamedu.wordpress.com/2010/04/24/110/

அதை சென்னை முழுக்க போஸ்ட்டர் ஒட்டினோம்..கடந்த பிப்ரவரி 22ம் தேதி உயர்கல்வி மானிய கோரிக்கை விவாத நாள் என்பதால் இச்செய்தி விவாதிக்கப்பட வேண்டும் என நாம் திட்டமிட்டோம் போஸ்டரில் உள்ள செய்திகளையே மனுவாகவும் சில சட்டமன்ற உறுப்பினர்களிடம் கொடுத்திருந்தோம்..(மனுவின் நகலை இணைத்துள்ளோம்)

இதற்காக நாம் பலவகையான முயற்சிகளை நாம் மேற்கொண்டும்..அரசு மாணவர்களுக்கு ஒதுக்கிய 50 கோடி ரூபாய் மாணவர்களின் கல்விக்கு போய்சேருகிறது என்பதை கண்காணிக்கவும்,திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 65 நாட்கள் வெளிச்சம் மாணவர்கள் தமிழகம் முழுக்க பிரச்சாரப்பயணம் மேற்கொண்டார்கள்..அதன் தொடர்ச்சியாகத்தான் மாணவர்கள் உதவி எண் 9698151515 துவங்கி மாணவர்களுக்கு உதவிவருகிறோம்…

நாம் என்ன பயந்து இந்த பணியை செய்தோமோ. அது நடக்க துவங்கியது.. என்னவெனில் ஆளுநர் சுர்ஜித்சிங் பர்ணாலா அவர்கள் கடந்த2010 ஜனவரி 6 ம் தேதி அறிவித்த அறிவிப்பில் மொத்த கட்டணத்தையும் அரசே ஏற்கும் என இருந்தது. இதை நம்பி அப்பாவியான 78883 முதல்தலைமுறை மாணவர்கள் பொறியியல் கல்லூரி கவுன்சிலிங்கிக்கு விண்ணப்பித்தார்கள்.. ஆனால் கவுன்சிலிங் நடைபெற்று கொண்டிருந்தபோது தான் அரசு முதல்தலைமுறை மாணவர்களுக்கான அரசாணை நிர்ணயித்த தொகையை வெளியிட்டார்கள்..குறிப்பாக அரசு பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு ரூ 5000 ம்.. சுயநிதி கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ 20000 என அறிவிக்க… இதனால் கவுன்சிலிங்க் விண்ணபித்த 78883 முதல்தலை முறை மாணவர்களில் நாற்பத்தியெட்டாயிரம் மாணவர்கள் மட்டுமே கல்லூரியில் சேர்ந்தார்கள்.அரசை நம்பி கல்லூரி கனவு கண்ட மற்ற மாணவர்கள் கனவுகள் கருகிபோனது..
ஏனெனில் இந்த மாணவர்களின் கல்விக்கு உதவ வேண்டிய அரசு குறைந்த பணத்தினை ஒதுக்கிவிட்டு தனது கையை விரித்து கொண்டது..

இது ஒருபுறமிருக்க கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் நிலமை மோசமானது… கல்லூரியில் சேர்ந்த மாணவர்களிடமிருந்து நம்மை உருகுலைய வைத்தது..கல்லூரி நிர்வாகங்கள் பணம் கவர்மெண்ட் கொடுக்கிறப்போ நாங்க திருப்பி தருகிறோம்.. நீங்க பணத்தை கட்டுங்க என கல்லூரிகள் மிரட்டுகிறார்கள் என்றும், கட்டணத்தை விட அதிகமாக பணம் கேட்பதாக நம் students Help line 9698151515 ல் தகவல் வந்துகொண்டே இருக்கிறது… விடாது பயணித்தோம்…ஏனெனில் வெளிச்சம் என்பது முதல்தலை மாணவர்களுக்கான கல்வி இயக்கமாக அறிவித்தோம்..இன்று வரை வெளிச்சம் மாணவர்கள் 515 மாணவர்கள் முதல்தலை முறை மாணவர்கள் என்பதையும் உங்களுக்கு தெளிவு படுத்துகிறோம்..

நாம் பயந்ததை போன்று பிரச்சனையை வெளியிட்ட தினமலர் கட்டுரை
தலைப்பு: கல்வி உதவித் தொகை வழங்க அரசு தாமதம்: கல்லூரி நிர்வாகம் கெடுபிடி
http://kalvimalar.dinamalar.com/tamil/NewsDetails.asp?id=8812

எதை எதையோ பேசும், அறிக்கையாக்கும்,போராட்டமாக்கும் கட்சிகளே,இயக்கங்களே,ஒத்தகருத்துடைய சிந்தனையாளர்களே..இந்த விசயத்தில் மட்டும் உங்கள் கவனம் படவே யில்லையா…

சுதந்திரமடைந்து இவ்வளவு காலங்களில் நாங்கள் தான் முதன்முதலில் கல்லூரிகளில் சேர்ந்தோம் என்பது எங்களுக்கு பெருமை..இந்த நாட்டின் முன்னேற்றத்திற்க்கான கேள்விகுறி…
எப்போதுதான் எமக்காகவும் உம்குரல் எழும்ப போகிறது….பார்ப்போம்..

ஏழைகளின் உயர்கல்விக்கான பணியில்
வெளிச்சம் மாணவர்கள்

இணைப்புகளா இடையிடையே போட்டதற்க்கு மன்னிக்கவும்…எங்கள் வலிகள் அப்படியே பதிவு செய்ய முணைந்தோம்…

இணைப்புகள்:
பிரச்சாரப்பயணப்படங்கள்:https://velichamedu.wordpress.com/%E0%AE%
பிரச்சாரப்பயண பத்திரிக்கை செய்திகள்:
https://velichamedu.wordpress.com/%E0%A
வெளிச்சம் மாணவர்கள் சட்ட மன்றத்தில் கொடுத்த மனு: http://velichamstudents.blogspot.com/2010/04/22.html

Leave a comment

HC warns against denying edu loans on minor technical grounds


Coming down heavily on banks for denying education loans to students on minor technical grounds, the Madras high court has said that educated youth are the building blocks of the nation. The court also directed the chairmen of nationalised and commercial banks to instruct their managers to process education loan applications “sympathetically”.

Justice R Sudhakar, passing orders on the writ pleas of twin sisters G Dhivya and G Preethi, observed: “Education loan should not be denied on hyper-technicalities… Bank managers should not develop retrograde attitude… They have to promote the cause of education, which will empower youth of our nation.”

The sisters had approached the high court after the Sengundram branch of the Canara Bank in Vellore district refused to sanction an education loan to help them pursue an engineering course at Veltech Hi-tech Engineering College at Avadi here. The applications were rejected on the ground that the girls’ father had obtained a loan to run a poultry farm from the same bank.

The bank claimed that there was nothing wrong in the refusal as the girls were unable to produce a no-objection certificate from other banks. Noting that entitlement to an educational loan was not automatic, the high court said the bank was well within the ambit of government policy to deny it.

However, the judge pointed out that a no-due certificate from banks should not be insisted upon as a precondition for granting educational loans. Justice Sudhakar said there was no such clause to the effect that a girl, who was a co-applicant in her father’s farm loan, would not be eligible for her own education loan. “This will be contrary to the scheme of providing education loan,” the judge said.

Agreeing that students cannot avail of more than one education loan at a time, Justice Sudhakar said: “This should not be confused with the loan availed of by the father from a bank for his business purpose… It is therefore clear that the scheme of an education loan is independent of other loans — business or agriculture.”

Underlining the important of education loans, Justice Sudhakar said that banks should have a positive attitude and encourage students to utilise loan facilities to pursue their education.

Taking into account the importance of bank managers and the laudable purpose of education loans, the judge said: “Chairmen of nationalised and commercial banks should suitably instruct bank managers, especially in rural areas, to ensure that as and when eligible and poor students apply for educational loan, their case should be considered sympathetically and in a customer-friendly manner to promote the cause of education and nation-building as the scheme is intended to fill up the vacuum that the state is feeling difficult to fill… Bank managers should not develop a retrograde attitude and deny education loan arbitrarily.”

Thank you : The Times of India