9 Comments

Achievements


ஜூனியர் சயிண்டிஸ்ட்…செந்தில்

அரியலூர் மாவட்டம் பிழிச்சுகுழி கிராமத்தில் பிறந்த நான்.அப்பாவை சின்ன வயசில் இறந்து போய்விடவே.. படிக்க முடியாமல் முந்திரிக்காடுகளில் முந்திகொட்டை பொறுக்கும் வேலை செய்து கொண்டிருந்தேன்…வெளிச்சம் இயக்குநர் என்னை கண்டுபிடித்து மிக சிரமப்பட்டு அவரின்  உதவியால் காரைக்குடி சிக்ரியில் கொமிக்கல் இஞ்னியரிங்க படித்தேன்.எனக்காக அவர் பட்ட வலிகளை என்னால் இங்கே பதிவு செய்ய முடியாது.ஏனெனில் அவ்வளவு கஸ்டம்,வலிகளை சுமந்த படி படித்தேன்.நான் இப்போது ஓமன் நாட்டில் ஜூனியர் சயிண்டிஸ்டாக பணிபுரிகிறேன்…என் வாழ்வு வெளிச்சத்துக்கு வந்தது வெளிச்சத்தால் தான்…..

ராசாத்தி– பொறியியல் கல்லூரி மாணவி.

அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் கிராமத்தில் பிறந்தேன்..அப்பா மனநோயாளியாக இருந்து நான் பண்ணிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதின அன்று இறந்து போனார்… அந்த வலியோடு எழுத ஆரமித்தேன்…நல்ல மதிப்பெண் எடுத்தேன்.. அப்பா இல்லாமல் அம்மா,என்னை படிக்க வைக்க முடியாது என அம்மா சொல்லிவிட கத்தினேன்,கதறினேன்..என் வாழ்கை படிக்க முடியாமல் கூலியாகவே போய்விடுமோன்னு பயந்தேன்..அப்பாவைபோலவே பைத்தியமாவே ஆகிபோனேன்..அப்போது தான் வெளிச்சம் எனக்கு தெரிந்தது.இன்றைக்கு உங்கள் முன் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறேன்…எனக்கு உதவி செய்கிறவர்களின் கனவுகளை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்.. என்னை போன்ற மாணவர்களுக்கு நிச்சயம் உதவுவேன்..

நன்றியுடன்

ராசாத்தி


என்னோட பெயர் மாரி,திருவண்ணாமலை மாவட்டம்,வடகரிம்பலூர் கிரமத்தில் பிறந்து.சின்னவயசிலே அப்பாவை குடிபழக்கத்திற்கு பறிகொடுத்தேன். படிக்காத அம்மாவிடம் படிப்புதான் வாழ்கைன்னு போறாடினேன்..பனிரெண்டாம் வகுப்பு முடிச்சிட்டு பெயிண்டிங்க் வேலை செய்து கொண்டிருந்தேன்..கூடவே சென்னை தொலைதூரகல்வியின் மூலம் யூஜி படிச்சிக்கிட்டிருந்தேன். வெளிச்சம் இல்லையேல் நான் இப்போது பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைகழக கல்லூரியில் இரண்டாமாண்டு முதுகலை சமூகப்பணி முடிக்கப்போகிறேன்..யாருக்கும் புண்ணியமில்லாத என்னை மற்றவர்களுக்கு உதவ வாய்ப்பளித்த வெளிச்சத்தின் மூலம் சென்னை வீதிகளில் என்னை போன்ற மாணவர்களின் கல்விக்காக உண்டியல் ஏந்திய மாணவர்களில் நானும் ஒருவன்..நிச்சயமா நானும் உதவுவேன்…

மு.மாரி
திருவண்ணாமலை

நான் கருப்பையா.எனக்கு இரு கால்களும் பிறவி ஊனம்..                     நடக்கவே ரொம்ப கஸ்ட்டப்படுவேன்..ஆனால் பெரம்பலூரிலிருந்து 28 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பஸ் வாராத ஊரான சிறுநிலா என்னோட ஊர்.அந்த ஊரிலிருந்து பெரம்பலூருக்கு வந்து போய் படிக்க முடியாமல் ரொம கஸ்ட்டப்பட்டேன்..பணிரெண்டாம் வகுப்பு முடிச்சிட்டு அரியலூர் அண்ணா யுனிவர்ஸ் சிட்டியில் கம்யூட்டர் இஞ்சினியரிங் சீட் கிடைத்த போது..நான் எங்க தங்குவதென தெரியாமல் தவித்தேன்..அது மட்டுமல்ல ஆட்டோ ஓட்டும் எனது அண்ணனால் கல்விக்கு உதவமுடியாமல் தவிக்கும் போது வங்கி கடன் போக மீதி கல்லூரிக்கட்டணம் செலுத்தியதோடு..வெளிச்சம் மிக சிரமப்பட்டு சாப்பாடு வழங்குவதோடு,வெளிச்சம் அரியலூர் அலுவலகத்தில் தங்கி தான் தினமும் கல்லூரிக்கு 6 கிலோ மீட்டர் மூன்று சக்கரத்தில் போய்வருகிறேன்..
ரொம்ப கஸ்ட்டப்பட்டு தான் படிக்கிறேன்..ஆனால் வெளிச்சம் இருக்கும் நம்பிக்கையில் தன்னம்பிக்கையோடு எழுந்து நிற்ப்பேன் அது உறுதி…

கருப்பையா…
பொறியியல் கல்லூரி மாணவர்

என்னோட பெயர் ஆண்டோ ஆதரவற்ற பிள்ளையாக மதுரையில் உள்ள

சிஸ்ட்டர்ஸ் காண்வெண்டில் வளர்ந்தேன்.ஆதரவற்ற பிள்ளையாக பிறந்ததே பாவம் கூடவே பார்வையில்லாதவன் என்பதால் இன்னும்கூடுதல் பரிதாபம்.நண்பர்கள் செய்த உதவியால் பி.ஏ.ஆங்கிலம் முடித்தேன்.பி.எட் படித்தால் வேலைக்கு போகலாம்.வாழ்கையை நடத்தலாம்னு நினைச்சேன்.எந்த நண்பர்கள் உதவியால் யூஜி படித்தேனோ அவர்கள் மூலம் வெளிச்சம் அறிமுகமானது..நான் பி.எட்.திருவள்ளூர் இந்திரா கல்லூரியில் படிக்கிறேன்..எனக்கு நிச்சயம் வெளிச்சத்தால் வெளிச்சம் கிடைத்தது..

ஆண்டோ
பார்வையற்ற மாணவர்

ராசாத்தி- பொறியியல் கல்லூரி மாணவி.அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் கிராமத்தில் பிறந்தேன்..அப்பா மனநோயாளியாக இருந்து இறந்து போனார்… அன்றுதான் நான் பண்ணிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதினேன்.. அந்த வலியோடு எழுத ஆரமித்தேன்…நல்ல மதிப்பெண் எடுத்தேன்.. அப்பா இல்லாமல் அம்மா,என்னை படிக்க வைக்க முடியாது என அம்மா சொல்லிவிட கத்தினேன்,கதறினேன்..என் வாழ்கை படிக்க முடியாமல் கூலியாகவே போய்விடுமோன்னு பயந்தேன்..அப்பாவைபோலவே பைத்தியமாவே ஆகிபோனேன்..அப்போது தான் வெளிச்சம் எனக்கு தெரிந்தது.இன்றைக்கு உங்கள் முன் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறேன்…எனக்கு உதவி செய்கிறவர்களின் கனவுகளை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்.. என்னை போன்ற மாணவர்களுக்கு நிச்சயம் உதவுவேன்..

நன்றியுடன்
ராசாத்தி

Advertisements

9 comments on “Achievements

 1. i was read above pople i am also ariyalur dist my native is karaikurichy the above people kown abt my village i doing mca my thought also like velicham
  vazhukal to my velicam deam

 2. வணக்கம் உங்களது செயல் என்னை பிரம்மிக்க வைக்கிறது.மேன்மேலும் உங்கள் பணி சிறக்க அன்பு கலந்த வணக்கங்கள்,வாழ்த்துக்கள்.
  உங்களது நெல்லை மாவட்ட ரசிகன் நாண் …..

 3. Sherin akka is’nt equal to any others…….she is really great……..

 4. hi……………………..

 5. i dont know about educational loan;pls help me oneany

 6. nice website……………………….

 7. is very great job

 8. i like that ka

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: