1 Comment

நடப்புகள்


சக மனிதனை மனிதனாக நேசிக்க கல்வி கொடுக்கும் வெளிச்சம்.

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்   ஆலயம்பதி னாயிரம் நாட்டல், பின்ன ருள்ள தருமங்கள் யாவும்   பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்  அன்ன யாவினும்  புண்ணியம்  கோடி  ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்” என்கிற வரிகளுக்கிணங்க ஏழை மாணவர்களுக்கு இலவசமாக உயர்தரக் கல்வி கொடுக்கவும்.சாதி மதம் இனம் பால் ரீதியாக ஒடுக்கப்படும் அனைவருக்கும் இயன்ற அளவு உதவிடவும்    வெளிச்சம் அமைப்பு, செரின்  என்கிற சமூக ஆர்வலரின் முயற்சியில் வழிகளை மட்டுமே சுமந்து கொண்டு அரியலூர் மாவட்டம் பிழிச்சிகுழி எனும் கிராமத்தில் பத்தாம் வகுப்பில் நிறைய மார்க் எடுத்தும் வறுமையினால் பள்ளிபடிப்பை இழந்துவிட்டு  முந்திரிகொட்டை பறித்துகொண்டிருந்த செந்தில் எனும் மாணவனை பார்த்து துடிதுடித்து அவனை விசாரிக்கும் போது பெரும்பாலும் தமிழகத்தின் பின் தங்கிய மாவட்டங்களான பெரம்பலூர்-அரியலூர்,தர்மபுரி போன்ற மாவட்டங்களில்  நிறைய மாணவர்கள் படிப்பை வறுமைக்கு பறிகொடுப்பதும் அதனால் முந்திரிகாடுகளிலும்,கோயம்பேடு மார்கெட்டுகளிலும் கூலிகளாய் ஆவதை கண்டு துடித்து இவர்களுக்கு எதையாவது செய்தே ஆக வேண்டும் இல்லையேல், மிகப்பெரிய கொடுமை அரங்கேறக்கூடும் என்பதால் செந்திலுக்கு கல்வி கொடுக்க ஆரமித்ததில் “வெளிச்சத்தின்” பயணம் துவங்கியது..(செந்தில் இன்று காரைக்குடி சிக்ரி யில் கெமிக்கல் இஞ்சினியரிங்க் முடித்துவிட்டு ஓமன் நாட்டில் ஜுனியர் சயிண்டிஸ்ட் ஆக பணிபுறிகிறார் என்பது வெற்றிச்செய்தி) அழிந்துகொண்டேயிருக்கும் சக மனிதனைக்காக துடிதுடித்து போகும் கிராமத்து மனித நேயத்தை அப்படியே தக்க வைத்து கொள்வதும்,சக மனிதனை மனிதனாக நேசிக்க வேண்டும் என்பதும், பணம் இல்லை என்பதால் எந்த ஒரு மாணவனும் தன்னுடைய கல்வியை இழந்துவிடக்கூடாது அதை தடுப்பதுதான் வெளிச்சத்தில் பிரதான நேக்கம்…


486 முதல் தலைமுறை மாணவர்கள் வாழ்வை மாற்றிய வெளிச்சம்..

வெளிச்சம் படிக்க வைக்கும் மாணவர்கள் அனைவரும் இந்தியா சுதந்திரமடைந்து இவ்வளவு காலங்களில் இவர்கள் குடும்பங்களில் எவரும் கல்வி சாலைகள் பக்கம்கூட திரும்பி பார்க்காத அப்பா-அம்மாக்களுக்கு பிறந்த முதல் தலைமுறை மாணவர்கள்.இந்த மாணவர்களுக்கு வெளிச்சம் கல்வி கொடுப்பதோடு மட்டுமல்லாமல், இவர்களுக்கு நாம் முன்னமே சொன்ன சமூக கடமைகளையும் கூடவே போதிக்கிறோம்.ஏனெனில் இவர்கள் படித்து, அவர்கள் வளர்ந்து வந்த கிராமத்துக்கும்- சமூகத்துக்கும் அவர்கள் திரும்ப செய்யவேண்டும் (Pay Back to the society).வெளிச்சத்தினால் படிக்கும் இவர்கள் இவர்களை போல் கஸ்டப்படும் மாணவர்களுக்கு நிச்சயம் உதவுவார்கள் என்பதே நமது நம்பிக்கை “செந்தில்” என்கிற மாணவனில் ஆரமித்த சமூக பயணம் இன்று 486 மாணவர்களில் தலை எழுத்தை            மாற்றி எழுதியிருக்கிறது..இவர்களில் 97 மாணவர்கள் பொறியியல் பயிலும் மாணவர்கள் 5  மருத்துவ மாணவர்கள் என மற்றவர்கள் பல்வேறு துறைகளில் பல்வேறு கல்லூரிகளில் படித்து வருகிறார்கள்..இவர்கள் அனைவரும் நன்றாக படித்து வருகிறார்கள் என்பது சந்தோசமான செய்தி..


வெளிச்சம் நிதி சேகரிக்கும் வழிமுறை:

வெளிச்சம் இந்த நிமிடம் வரை கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் வரையான நிதியை நன்கொடையாளர்களிடமிருந்து மாணவர்களின் கல்லூரியின் பெயரில் “டி.டி” (Demand Draft )ஆக வாங்கி நேரடியாக கல்லூரிக்கு   அனுப்பபடுகிறது..இதில் வெளிச்சம் எந்த வகையிலும் பணத்தினை கையில் வாங்கியதில்லை அதனால் தான்….வெளிச்சத்தின் மூலம் இவ்வளவு தூரம் சாத்தியமாகியுள்ளது என்பது மகிழ்ச்சியான விசயம்.அது மட்டுமில்லாமல் ஒரு கட்டத்தில் நன்கொடையாளர்கள் யாரும் வராத சூழலில் சென்னை நகரங்களின் பல்வேறு இடங்களில் வெளிச்சத்தின் முன்னால் மாணவர்கள் 40 பேர் படிக்கும் மாணவர்களுக்காக உண்டியல் குலுக்கிட முடிவெடுத்து,அதன்படி உண்டியல் குலுக்கி அதில் கிடைத்த பணத்தில் 38 மாணவர்களுக்கு கல்லூரிக்கட்டணம் கட்டினர் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறோம்..அது மட்டுமில்லாமல் வெளிச்சத்திற்கான தனி நன்கொடையாளர்களின் உதவியிலும்,வெளிச்சத்தின் முன்னால் மாணவிகள் சிலர் எம்ராயிடரிங்க்,சுடிதார் தைய்த்தும் அவர்களின் உதவியிலும் தான் வெளிச்சத்தின் அன்றாட நகர்வுகள் மிக சிரமத்துடன் நடைபெருகிறது…


வெளிச்சத்தின் நீண்ட கால திட்டம்:

ஒரு மாணவனில் இருந்து துவங்கிய வெளிச்சத்தின் கல்வி பயணம் இன்று 486 யை கடந்து நிற்கிறது..நிச்சயம் இது நீளுமே தவிர நின்று விடாது..எங்கள் பயணத்தில் நீங்களும் பங்கெடுத்துக்கொள்ளுங்கள்.எங்களை போன்ற மாணவர்களுக்கு உதவிடுங்கள்..

அன்புடன்
வெளிச்சம் மாணவர்கள்…

Advertisements

One comment on “நடப்புகள்

  1. Velicham……. in a simple word….it is apart from great….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: