Leave a comment

இன்னும் ஓர் கோரிக்கை முதல்வரய்யா….(வெளிச்சத்தின் கல்வி பயணத்தில் மேலும் ஓர் வெற்றி செய்தி)


ஏழை மாணவர்களின் வாழ்வை மாற்றிட கண்ணீரையும் வலிகளை மட்டுமே சுமக்கிறது என்பது வெளிச்சத்தினை நன்கு அறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும். அதைபோலவே ஏழை மாணவர்களின் வாழ்கையை கல்வியால் வசந்தமாக்குவதே  வெளிச்சத்தின் லட்சியமாக கொண்டு அவ்வழியில் வலிகளையெல்லாம் தாங்கிக்கொண்டு வெளிச்சம் பயணிப்பதை நீங்கள் அறிவீர்கள்.மேலும் முதல் தலைமுறை மாணவர்களின் வாழ்வை மாற்ற வெளிச்சம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அற்புதமானவை என்பதை உங்களிடம் நிரூபிக்க வெளிச்சம் கடமைப்பட்டுள்ளது..அதற்காகவே  வெளிச்சத்தின் இடைவிடாத போராட்டங்களில் சிலவற்றை இங்கு பதிவு செய்கிறோம்…

2004 ம் ஆண்டு முதல் வெளிச்சத்தின் கல்விகான பணிகளின் அறுவடை சந்தோசமாக முந்திரிக்கொட்டை பொறுக்கி கொண்டிருந்த  செந்தில் இன்று “ஜூனியர் சைன்டிஸ்ட்” என்பதையும் பதிவுசெய்கிறோம்.

2008 ம் ஆண்டு 30 மாணவர்கள் கல்லூரியை விட்டு ரோட்டில் நின்றதை வெளிச்சம் “டைம்ஸ் ஆப் இந்தியா” பத்திரிக்கையில் செய்தி வெளியானது அதன் மூலம் அந்த மாணவர்கள் படிப்பை முடித்தார்ர்கள்…அதன்பிறகு 2009 ம் ஆண்டு 50 மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்தமுடியாமல் படிப்பை இழக்க இருந்த சூழலில் வெளிச்சம் ” நிதி உதவிக்காக காத்திருக்கும் முதல்தலைமுறை ஏழை மாணவர்கள்” என்கிற செய்தியை வெளியிட்ட தினமனி நாளிதழின் பேருதவியால் சில மாணவர்கள் படிப்புக்கு வழி பிறந்தது..இப்படியான பயணத்தில் மாணவர்களின் எண்ணிக்கை150 ஐ அடைந்த போது முதன் முதலாக வெளிச்சத்தின் நோக்கத்தினையும்,செயல் பாட்டையும் 16.1.09 “அவள் விகடன்”  மாத இதழ் ” கல்வி இல்லை என்பதும் ஊனம்தான்” என செய்திகட்டுரை வெளியிட்டது என்பது மகிழ்ச்சிக்குறிய விசயம்…அதன் பிறகு “வெளிச்சம் தரும் மனுசி” என “குமுதம்” வார இதழிலும் செய்தியானது..செந்திலில் இருந்து ஆரம்பமான இந்த பயணம் ஒன்று இரண்டாகி இன்று 486 மாணவர்களின் கல்விக்கு வெளிச்சம் வழிகாட்டுகிறது..அதிகமாகிப் போன மாணவர்களின் கல்வியை காப்பாற்றுவதற்காக வெளிச்சம் மாணவர்களால் முதல் தலைமுறை மாணவர்களின் படிப்பைப் பாதுகாக்க “திரைப்பட நடிகர் ஜெயம் ரவி” அவர்களோடு சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தியது அதற்கும் பலன்டையவில்லை..ஆனால் கல்லூரிகள் கல்விக்கட்டணம் செலுத்தமுடியாததால் மாணவர்களை படிக்க விடாமல் கல்லூரியை விட்டு வெளியே அனுப்ப இருக்கிற சூழலில் வேறு வழியில்லாமல் 40 வெளிச்சம் மாணவர்கள் தமிழக காவல்துறை இயக்குநரிடம் தமிழகம் முழுக்க உண்டியல் குழுக்கிட அனுமதி வாங்கினோம்..அதன்படி சென்னை முழுவதும் உண்டியல் ஏந்தினோம்..இச்செய்தி “தமிழக அரசியல்”,”டெக்கான் குரேனிக்கல்”,”என்.டி,டிவி”  போன்ற ஊடங்கங்களிலும் வெளியானது..வெளிச்சம் டிசம்பர் மாதம் முழுக்க ஏந்திய உண்டியல் செய்தி முதல்வரின் காதுகளில் விழுந்ததோ என்னவோ..ஜனவரி -6 ம் தேதி முதல்தலைமுறை ஏழை மாணவர்களின் கல்வியை “அரசே” ஏற்கும் என்று அறிவித்தார்கள்..அதனைத் தொடர்ந்து முதல்வருக்கு நன்றி தெரிவித்த முதல் அமைப்பு வெளிச்சம் தான் என்பதை பதிவு செய்கிறோம்…வெளிச்சம் பணி  நிறைவாகி போனது என்கிறார்கள்…மாறாக  வேறு வழியில் பணி கூடுதலானதே தவிர  குறைந்த பாடில்லை தேடியது..அவை யாதெனில்  முதல்தலைமுறை ஏழை மாணவர்களின் கல்வியை அரசே ஏற்கும் அறிவிப்பில் அனைத்துக் கட்டணங்களையும் அரசே ஏற்க வேண்டும் என கோரிக்கை வைத்தது அச்செய்தி “தினமனி” நாளிதழில்  ஜனவரி 17 அன்று செய்தியானது…ஆனால் 91 மாணவர்கள் கல்லூரியை விட்டு அனுப்பப்பட இருக்கிற சூழலில் வெளிச்சம் மாணவர்கள் அரியலூரிலும்,24 அன்று சென்னையில் பல்வேறு இடங்களில் (தலைமை செயலகம், முதல்வர் வீடு உட்பட)இந்த போஸ்டர் வெளிச்சம் மாணவர்களால் ஒட்டப்பட்டது..போஸ்டரில் வங்கி கடன் முழுவதுமாக கிடைக்காததாலும்,வறுமையால் கல்லூரிக்கட்டணம் செலுத்த முடியாததாலும் கல்லூரிப் படிப்பை இழக்க  இருக்கிற முதல் தலைமுறை ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் என போஸ்டரில் போட்டிருந்தோம்..22ம் தேதி உயர்கல்வி மானிய கோரிக்கை விவாத நாள் என்பதால் இச்செய்தி  விவாதிக்கப்பட வேண்டும் என நாம் திட்டமிட்டோம் போஸ்டரில் உள்ள செய்திகளையே  மனுவாகவும் சில சட்டமன்ற உறுப்பினர்களிடம் கொடுத்திருந்தோம்..

இந்த தொடர் முயற்சிகளின் அடிப்படையில் இந்த அறிவிப்பில் அடுத்த வருடம் கல்லூரியில் சேருகிற மாணவர்கள் மட்டும் தான் பயனடைவார்கள் என தமிழக அரசால் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.போராட்டங்களும்,தொடர்முயற்சிகளும் தோற்றதாக இல்லை என்பது வரலாறு…அதன்படி கல்விக்கான தொடர்பயணத்தில் வெளிச்சம் வெற்றி பெற்றுள்ளது என மகிழும் இச்சமயத்தில் இன்னுமொரு விசயத்திற்காக கோரிக்கை வைக்கிறது….  அதன் கீழ் முதல் தலைமுறை மாணவர்களின் கல்வியை அரசே ஏற்கும் அரசாணையில், அடுத்த வருடம் கல்லூரியில் சேருகிற மாணவர்களுக்கு மட்டும்தான் இந்த விதிகள் பொருந்தும். ஆனால், இப்போது கலூரிகளில் படித்து கொண்டிருக்கும் மாணவர்களின் வாழ்கை என்னாவது?…
முதல்வரைய்யா! உங்களின் பேனா இப்போது பட்டினி கிடைப்பவனுக்கும் (கல்லூரிப்படிப்பை இழக்க இருகிற மாணவர்களுக்கும்) சேர்த்தே விதி செய்யட்டுமே!…
கோரிக்கைகளோடு..
வெளிச்சம் மாணவர்கள்

(பத்திரிக்கை செய்திகளையும் புகைப்படங்களையும் <http://picasaweb.google.com/velicham.students/hQwMHL?feat=directlink> இந்த இணைய தளத்தின் பத்திரிக்கைத் துளிகள் பக்கத்தில் காணலாம்)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: