Leave a comment

பெற்றோரை அவமதிக்கும் வங்கிகள்: தொடரும் அவலநிலை


வருடக்கணக்காக வங்கிகளின் வாசலில் காத்துக்கிடக்கும் மாணவர்களையும் பெற்றவர்களையும் வெளிச்சம் பார்த்திருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும்.வெளிச்சம் மாணவர் உதவி எண்ணில் வருகிற அழைப்புகளில் அதிக பட்சமான கால்களில் இது போன்ற வங்கிகள் அலைக்கழிக்கும் பிரச்சனை தான் இங்கு அதிகமாக இருக்கிறது.இதுல் வெளிச்சம் மாணவர்கள் இதுவரை வங்கிகளிடம் பேசி முறையிட்டு 167 வங்கிக்கடன் பெற்றிருக்கிறோம் என்பதோடில்லாமல் தொடர்கிறது நம்பயணம்.. அந்த வரிசையில் தினமலரில் நாம் படித்த இந்த நிகழ்வும் நம்மை பதிவு செய்ய வைத்தது..

ராமநாதபுரம்:

மாவட்டத்தில் கல்வி கடன் கேட்டு செல்லும் பெற்றோரை வங்கியாளர்கள் அவமரியாதை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. “”கல்வி கடன் வேண்டுவோர் வங்கிகளில் தாராளமாக உதவி பெறலாம்,” என, முந்தைய மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார். இதை நம்பி வங்கிகளின் கதவை தட்டியவர்களுக்கு பட்டை நாமம் மட்டுமே போடப்பட்டது. பலருக்கும் பல்வேறு காரணங்களை கூறி வங்கி அதிகாரிகள் அலைகழிப்பு செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் தொடரும் இந்த அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க யாரும் முன்வரவில்லை. மாறாக சான்றிதழ்களுடன் தங்கள் குழந்தையை கூட்டிக்கொண்டு தெருவில் சுற்றும் பெற்றோரின் எண்ணிக்கை தான் அதிகரித்து வருகிறது. பின்தங்கிய இம்மாவட்டத்தில் தங்கள் குழந்தைகளுக்கு உயர்கல்வி தரவேண்டும் என்ற ஆசையில் பெற்றோர் படும் பாடு, வங்கி அதிகாரிகளுக்கு புரிவதில்லை.

ஒரு முறையீட வரும் போது அதை எப்படியெல்லாம் தட்டிக்கழிக்கலாம் என்ற ரீதியில் தான் வங்கிகள் மனுதாரரை அனுகுகின்றன. நாளடைவில் கடனுதவி கேட்டு வரும் பெற்றோருக்கு வங்கியாளர்களால் அவமரியாதை செய்யப்படுவது தற்போது அதிகரித்துள்ளது. உரிய பதிலளிக்காமல், எடுப்பிலேயே, “லோன் கிடையாது,’ என, முகத்தில் அடித்தார்போல பதில் வருவது பெற்றோரை முகம் சுளிக்க வைக்கிறது. இது போன்ற குற்றசாட்டுகளுக்கு முறையிட முன்பு முன்னோடி வங்கியை அணுகினர். அங்கும் இப்போது உரிய தீர்வு கிடைப்பதில்லை. இதனால் மனமுடையும் பெற்றோர் கலெக்டரிடம் முறையிட தொடங்கியுள்ளனர். மக்கள் குறைதீர்க்குள் நாள் கூட்டத்தில் வரக்கூடிய மனுக்களில் கல்விக்கடனுக்கு வரும் முறையிடுகளே இதற்கு சாட்சி. ராமேஸ்வரம் கரையூர் மருதுபாண்டியர் நகரை சேர்ந்த ராஜம் கூறியதாவது: எனது மகன் செல்வக்குமாருக்கு பி.எட்., படிப்புக்காக ராமேஸ்வரம் வங்கி ஒன்றை அணுகினேன். மற்றொரு வங்கியில் தான் இதற்கு பணம் தருவதாக அவர்கள் கூறினர். அதை நம்பி அந்த வங்கிக்கு சென்ற போது, முன்பு நான் சென்ற வங்கியில் தான் இதற்கு பணம் வழங்கப்படும் என அவர்களும் மறுத்துவிட்டனர். மீண்டும் இரு வங்கிகளையும் தொடர்பு கொண்ட போது என்னை அவமானப்படுத்தினர். மனவிரக்தியில் கலெக்டரிடம் முறையிட்டுள்ளேன், என்றார். இதே போல இன்னும் எத்தனையோ பெற்றோர் வங்கிகளில் அவமானத்தை சந்திப்பது தொடர்கிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: