1 Comment

மாணவி விவகாரம்.. ஆசியர் மீது நடவடிக்கை எங்கே


தேனி : மாணவியை ஆசிரியர் பலாத்காரம் செய்த விவகாரத்தில், பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப மறுத்த ஊர் மக்களிடம் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி.பொம்மிநாயக்கன்பட்டி அரசு பள்ளி மாணவியை மிரட்டி, ஆசிரியர் மகேந்திரன் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில், பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் வரை, பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்ப மாட்டோம் என, ஊர்மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து, 437 மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் நேற்று விடுதியில் தங்கியிருந்த 27 மாணவியரை தவிர வேறு யாரும் பள்ளிக்கு வரவில்லை. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வகுமார், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ராஜாராம், தனி தாசில்தார் முருகேஸ்வரி, தாசில்தார் ராஜேஸ்வரன் ஆகியோர் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் தங்கராஜ் உட்பட, ஊர்மக்களிடம் சமாதான கூட்டம் நடத்தினர். ஆசிரியர் மகேந்திரனை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். தலைமை ஆசிரியர், வார்டன் மற்றும் இரண்டு ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மாணவியை படிக்க வைக்கும் முழு செலவையும் அரசே ஏற்க வேண்டும் என, ஊர்பிரமுகர்கள் கோரிக்கை விடுத்தனர். கலெக்டரிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப ஒப்புக்கொண்டனர்.

நன்றி: தினமலர்

One comment on “மாணவி விவகாரம்.. ஆசியர் மீது நடவடிக்கை எங்கே

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: