2 Comments

மதுவுக்கு அடிமையாகும் மாணவர்கள்..


அரசு பள்ளி மாணவர்களில் சிலர், பள்ளிக்கு முழுக்கு போட்டு விட்டு, ஆண்டிபாளையம் வாய்க்காலுக்குச் சென்று, தீயபழக்கங்களில் ஈடுபடுகின்றனர். பீடி, சிகரெட், மது வகைகளுக்கு அடிமையாகின்றனர். அவர்களை திருத்த வேண்டிய கல்வித்துறை அதிகாரிகள் மவுனம் சாதிக்கின்றனர்.

ஆண்டிபாளையம் ஸ்டாப் அருகே உள்ளது பி.ஏ.பி., கிளை கால்வாய். 10 அடி ஆழம் கொண்டது; ஏழு அடி வரை தண்ணீர் செல்லும். திருப்பூர் நகரப்பகுதியை விட்டு, 10 கி.மீ., தள்ளி, காட்டுப்பகுதியில் இருப்பதால், நகரத்தினர் யாரும் இப்பகுதிக்கு அதிகமாக செல்வதில்லை.இதை பயன்படுத்திக் கொள்ளும் அரசு பள்ளி மாணவர்கள், பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகங்களுக்கு தெரியாமல், தினமும் அங்கு செல்கின்றனர். வாய்க்காலில் தண்ணீர் விடப்படும் நாட்களில் 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும், தண்ணீர் வராதபோது, 20க்கும் மேற்பட்ட மாணவர்களும் அப்பகுதியில் முகாமிடுகின்றனர்.

 

அப்பகுதியினர் கூறியதாவது:தினமும் காலை 10.00 மணிக்கு மேல், ஒரு பஸ்சுக்கு 10 பேர் வீதம் ஆண்டிபாளையம் வாய்க்காலுக்கு மாணவர்கள் வருகின்றனர். வரும் மாணவர்களில் யாரும், இங்குள்ளகிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் அல்ல. வாய்க்காலில் தண்ணீர் சென்றால், 1.00 மணி வரை குளித்து விட்டு, திரும்பிச் செல்கின்றனர். மதியத்துக்கு மேல், மேலும் சில மாணவர்கள் வந்து குளிக்கின்றனர். சில நேரங்களில் மூன்றுக்கு மேற்பட்ட பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் வரும்போது, அவர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது. அடிதடியும் ஏற்படுவதும் உண்டு. வாய்க்காலில் தண்ணீர் போகாத நேரத்தில், இங்கு வரும் மாணவர்கள் ஏமாந்து போகின்றனர். வந்து விட்டோம்; நேரத்தை போக்கியாக வேண்டும் என எண்ணி அருகில் உள்ள காடுகளுக்குள் சுற்றித்திரிகின்றனர்.சில நேரங்களில் அருகில் பயிரிடப்பட்டுள்ள, மக்காச்சோளம், கம்பு உள்ளிட்டவற்றை பறித்துச் சென்று விடுகின்றனர். ஆண்டிபாளையம் வாய்க்கால், அதை ஒட்டி கிளை வாய்க்கால் பிரியும் இடத்தில் அரசு கட்டடம் உள்ளது; அதற்குள் ஒளிந்து கொள்கின்றனர். இப்பகுதிக்கு ரோந்து போலீசார் வருவதும் இல்லை; மாணவர்களை கண்டு கொள்வதுமில்லை, என்றனர்.

 

மாணவர்களிடையே தீய பழக்கம்: ஆண்டிபாளையம் ஷட்டரை ஒட்டிய பகுதியில் இருந்து செட்டிபாளையம், நல்லூர் வருவதற்கு கிளை வாய்க்கால் ஒன்று பிரிகிறது. அந்த இடத்தில், பொதுப்பணித்துறையால் கட்டப்பட்ட இரண்டு கட்டடங்கள் பயன்பாடின்றி உள்ளன. வாய்க்காலில் தண்ணீர் போகாதபோது, இங்கு வரும் மாணவர்கள், நேரத்தை கழிக்க, பீடி,சிகரெட், மது உள்ளிட்ட தீய பழக்கங்களை கற்றுக்கொள்கின்றனர். இதற்கு, அப்பகுதியில் சுற்றித்திரியும் வேலையில்லாத “சைக்கோ’ வாலிபர்கள் உதவுகின்றனர்.

தடுப்பது யார்? குழந்தைகள் பள்ளிக்கு சென்று படித்துக் கொண்டிருப்பர் என பெற்றோர் நம்புகின்றனர். உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கும்; வேறு காரணத்துக்காக விடுமுறை எடுத்திருப்பர் என அரசு பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களின் விடுமுறையை பெரிதுபடுத்துவதில்லை. பெற்றோரும், பள்ளி நிர்வாகமும் குழந்தைகள் பள்ளிக்கு வரவில்லை எனில், ஏன், எதற்கு வரவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அப்போது தான், தீய பழக்கத்தை கற்றுக்கொள்ளும் மாணவர்களை திருத்த முடியும்.

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:தனியார் பள்ளிகளில் நடத்துவதுபோல், அரசு பள்ளிகள் பலவற்றில் பெற்றோருடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்துவதில்லை.  இதனால், மாணவர்களின் நிலை குறித்து பெற்றோருக்கு நேரடியாக தெரிவதில்லை. துறை சார்ந்த உயரதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்துவதில்லை. ஒவ்வொரு முறை தலைமை ஆசிரியர் கூட்டம் நடைபெறும்போது, மாணவர்களின் குறைவான வருகை குறித்து கல்வித்துறைக்கு தெரிவித்துக் கொண்டிருக்கிறோம்; எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை, என்றார்.

 

நன்றி: தினமலர்-4.12.2010

2 comments on “மதுவுக்கு அடிமையாகும் மாணவர்கள்..

  1. Lot of thanks to reveal this issue. And need more concentration and action regarding this issue. If u organise any action like counseling or guidance to the needed students, I can provide my time in this regard.

  2. Lot of thanks to reveal this issue. And need more concentration and action regarding this issue. If u organise any action like counseling or guidance to the needed students, I can provide my time in this regard. Thank U.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: