Leave a comment

மாணவிகளை கற்பழித்த ஆறு ஆசிரியர்கள்


வெளிச்சம் மானவர்கள் வெளியிட்ட இந்த பிரச்சனையை ஏறாளமானோர் படித்துவிட்டு..அந்த ஆசிரியரை கைது செய்யவேண்டும் எனவும்.சுட வேண்டும் எனவும் கருத்து வெளியிட்டனர்…இந்த பிரச்சனையில் நீண்டகாலமாக இந்த காமகொடூர ஆசிரியரின் நண்பர்களான ஆசிரியர்கள் ஆறு பேரும் இதுபோன்ற மாணவிகளை சீரலித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது…

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஆசிரியர் மகேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மகேந்திரன் மாணவர் பருவத்தில் இருந்தே இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாகவும், இவருடைய நண்பர்கள் ஆறு பேரும் இதேபோல் பல்வேறு பெண்களுடன் செக்ஸ் தொடர்பு வைத்து, அவர்களை மொபைல் போனில் படம் பிடித்து, மிரட்டும் வழக்கம் உள்ளவர்கள் எனவும் போலீசாரிடம் கூறியுள்ளார். மகேந்திரன் சுட்டிக்காட்டிய ஆறு பேரும், தற்போது வெவ்வேறு இடங்களில் ஆசிரியராக பணியில் உள்ளனர். இதில் இருவரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தேனி எஸ்.பி., பாலகிருஷ்ணனிடம் கேட்ட போது, “கைதாகியுள்ள மகேந்திரன் சுட்டிக்காட்டிய ஆறு பேரில், இருவரிடம் விசாரணை நடக்கிறது. இவர்கள் மீது புகார் ஏதும் இல்லாததால், வழக்கு பதிவு செய்ய முடியாது. ஆனாலும், இது போன்ற குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளதால், அவர்களது வாக்குமூலத்தை பெற்று, அரசுக்கு அறிக்கை அனுப்ப உள்ளோம். மற்ற நான்கு பேர் யார் என்பது தெரியும். விரைவில் அவர்களிடமும் விசாரணை நடத்தி, அறிக்கை பெறப்படும். தவிர, பள்ளிகளில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் ஆசிரியர்களை, ரகசிய போலீசார் மூலம் கண்காணிக்க துவங்கி உள்ளோம்,என்றார்.

நம் முந்தைய கட்டுரை:
https://velichamedu.wordpress.com/2010/12/01/

நன்றி: தினமலர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: