Leave a comment

பள்ளி மாணவர்களுக்கு போதை ஊசி


பொள்ளாச்சியில் போதை ஊசி விற்று கைதான 2 பேரும் பள்ளி மாணவர்களுக்கு சப்பை செய்தது தெரிய வந்துள்ளது. பொள்ளாச்சி மகாலிங்க புரம் பகுதியில் போதை மருந்து விற்பனை செய்யப்படுவதாக பொள்ளாச்சி கிழக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல்பாண்டியன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது பாலகோபாலபுரம் வீதியில் உள்ள தொடக் கப்பள்ளி வளாகத்தில் சந்தேகப்படும் படியாக நின்ற 2 வாலிபர்களை பிடித்து சோதனை செய்தனர். அவர்கள் 15 போதை மருந்து பாட்டில்கள், 2 ஊசிகள் (நீடில்), 2 சிரஞ்சு கள் ஆகியவற்றை மறைத்து வைத்திருந்தனர். அவை பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் அவர் கள் நேதாஜி ரோட்டை சேர்ந்த ரகுபதி (27), பாலகோபாலபுரம் வீதியை சேர்ந்த செந்தில்குமார் (31) என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து 2 பேரிடமும் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவலை கூறியுள்ளனர்.

பொள்ளாச்சி பகுதியில் ஜெயா என்பவர் மருந்து கடைகளில் இருந்து டாக்டர்கள் சீட்டு இல்லாமல் மருந்து பாட்டில்களை வாங்கி சப்ளை செய்துள்ளார். அவரிடம் இருந்து 2 பேரும் போதை மருந்து பாட்டில் களை வாங்கி விற்பனை செய்துள்ளனர். ஒரு ஊசிக்கு ரூ. 250 வரை வசூல் செய்துள்ளனர்.

பாலகோபாலபுரம் தொடக்க பள்ளியில் நின்று கொண்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் விற்பனை செய்வதோடு அவர்களே ஊசியும் போட்டுள்ளனர். ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் நிரந்தர வாடிக்கையாளராகவும் உள்ளதாக தெரிவித்தனர். ஒரு ஊசிக்கு ரூ. 100 முதல் 150 வரை பணம் கிடைப்பதால் இந்த தொழிலை செய்து வந்ததாக தெரிவித்துள்ளனர்.

2 பேரும் கொடுத்த தகவலின்படி மருந்து கடைகளில் இருந்து வாங்கி சப்ளை செய்யும் ஜெயா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இதே போல் போதை ஊசி விற்கும் கும்பல் உள்ளதா எனவும் விசாரித்து வருகின்றன

நன்றி:மாலைமலர்-9:12:2010

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: