Leave a comment

வலிகளை உணர்தவர்கள் மட்டுமே வழிகாட்டியாக முடியும் – திரு.சந்திராயன் மயில்சாமி அண்ணாதுரை


வெளிச்சம் மாணவர்களின் கல்விப்பணியை தங்களுக்கு மகிழ்ச்சியோடு தொடர்ந்து தெரியப்படுத்திவருகிறோம்.. ஏனெனில் உங்கள் வழிகாட்டுதலில் தான் நாங்கள் வளர்கிறோம்.. இந்த பணியில் எங்கள் பணியை பாராட்டி 2009 ம் ஆண்டு நிலவுக்கு சந்திராயன் விண்கலம் அனுப்பிய அறிவியல் தமிழர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களை சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது இந்த இணையத்தின் வாயிலாக.. அந்த சந்திப்பின் நினைவுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்…

வெளிச்சம் மாணவர்களின் கல்வி பயணத்தில் இந்த சந்திப்பை ஒரு அங்கிகாரமாகவே கருதுகிறோம்...

இருவாரங்களுக்கு முன்பு சென்னை வேல்ஸ் பல்கலைகழகத்தில் நடைபெற்ற 18வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கல ந்து கொள்ள வருகை தந்திருந்த அவரின் சார்பாக அவரது நண்பர்கள் வெளிச்சம் மாணவர்களிடம் இந்த தகவலை சொன்னபோது நாம் நம்மை கிள்ளிகூட பார்த்தோம்.ஏதுமற்ற நிலையில் நிற்கும் நம் பணியை மதித்து அழைத்தது 2018ல் நிலவிற்க்கு சுற்றுலா செல்ல சந்திராயன் கையருகே நிலவு அய்யா.மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் என்பதால்…

சரியாக மாநாடு முடித்த சிறிது நேரத்தில் நம்மை தொடர்புகொண்ட அரிமா டாக்டர்.சிவக்குமார். உங்களை முதலில் அய்யா சாப்பிடசொன்னார் என சொன்னபொழுது காலையில் இருந்து சாப்பிடாமல் இருந்த மாணவர்களின் பசியை அறிந்த தாய்தான் நமக்கு ஞாபகத்தில் நிற்க.. நாம் நகர்ந்தோம் சாதாரணமானவர்கள் கூட கொஞ்சம் அலட்டிகொள்ளும் காலத்தில் எதார்த்த மனிதர்களைபோல் எளிமையாய் புன்னகையோடு நம்மை வரவேற்றார். முன்பின் தெரியாத மாணவர்கள் அவரின் எளிமையை கண்டு ஆச்சிரியப்பட்டார்கள்..

சாப்பாட்டை முடித்ததும் வேல்ஸ் பல்கலைகழகத்தின் நூலகத்தில் சரியாக 2.30 மணிக்கு நம் மாணவர்களை சந்தித்தார்..

வெளிச்சம் மாணவர்கள் மற்ற ஏழை மாணவர்களின் வாழ்வில் ஏற்றும் செயல்பாடுகளை வெளிச்சம் செரின் அவர்கள் விளக்கினர். அதனை தொடர்ந்து கல்வியை கனவாக கண்டிருந்த மாணவர்களின் கனவு நனவான மாணவர்கள் கல்விக்காக பட்ட வலிகளை கூர்ந்து கேட்டார்..26 ஆறு நாட்களாக கல்லூரிக்கட்டணம் செலுத்த முடியாத மருத்துவம் மற்றும் நர்சிங் மாணவியர்கள் 6 பேரை வலியை கேட்ட அவர் நிச்சயம்என்ன செய்ய வேண்டுமோ அதை நாம் செய்வோம்.. நான் படிக்கும் காலங்களில் நான் பட்ட அதே கஸ்டங்கள் இனியும் தொடராமல் தடுத்தாக வேண்டும் என வருத்தப்பட்டு இனி நாம் பேசாமல் செயல்பாட்டினை செய்வோம் என்றார்..

வெளிச்சம் மாணவர்களின் செயல்பாடு மிகச்சிறப்பாக இருக்கிறது. இது இந்தியாவில் கல்விக்கான மக்கள் இயக்கமாக வளரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது என்று வாழ்த்தினார்..

இந்த சந்திப்பிற்க்கு பின் தீடீரென தன் தந்தையை இழந்த காரணத்தினால் MBA கல்லூரி படிப்பை தொடரமுடியாமல் தவித்த மாணவி முபிதா பாத்திமா என்கிற மாணவிக்கு ரூபாய் 20000 காசோசலையை வழங்கினார்கள்..

ஒரு மணி நேர உரையாடலில் வெளிச்சம் மாணவர்களின் வலிகளை உணர்ந்தவராய் தன்னுடன் வந்திருந்த பேசியபடி நகர்ந்தார்..

வலிகளை உணர்தவர்கள் மட்டுமே சிறந்த வழிகாட்டியாக இருக்கமுடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளில் இவரும் இவர் நண்பர்களும் அடங்குவர் ..

மொத்த படங்களை பார்க்க:

Mylsamy Annadurai with Velicham Students
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: