Leave a comment

Join Hands for Our Cause


ஏழை மாணவர்களின் உயர் கல்விக்கு உதவிட நிதியளிப்பீர்

 

உறவுகளே!


வெளிச்சம் மாணவர்களின் வணக்கங்கள்,  2004 ஆண்டு முதல் வெளிச்சம் அமைப்பானது சென்னையைத் மையமாக கொண்டு, ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு உழைத்து வருகிறது. ஏனெனில் ஏழை மாணவர்கள் பணமில்லை என்கிற  ஒரே காரணத்திற்காக தங்கள்  வாழ்க்கையையும், படிப்பையும் இழக்கக் கூடாது என்பது மட்டும் தான் வெளிச்சத்தின் நோக்கம்.  உங்களை போன்ற உதவும் உள்ளங்களின் உதவியால் வெளிச்சம்  இன்றுவரை  தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கண்டறியப்பட்ட 515 முதல்தலைமுறை ஏழை மாணவர்களில் 6 மாணவர்கள் பொறியாளராகவும், 36 மாணவர்கள் ஆசிரியராகவும், 22 மாணவர்கள் வழக்கறிஞராகவும் படிப்பை முடித்து இருக்கிறார்கள் மேலும் 86 மாணவர்கள் பொறியியல் துறையிலும், 11 மாணவர்கள் மருத்துவத்துறையிலும் மற்ற மாணவர்கள் பல்வேறு துறைகளில், பல்வேறு கல்லூரிகளில் படித்துக்கொண்டு இருக்கிறார்கள்.. வெளிச்சத்தின் முதல் மாணவர்  செந்தில் என்பவர் இப்போது ஜூனியர் சயிண்டிஸ்டாக பணிபுரிகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்..

இது ஒருபுறமிருக்க அவசர உலகில் பெருகிவரும் மாணவர்களின் தற்கொலைகளை தடுத்திடவும், இது போன்ற மாணவர்களுக்கு உதவிட மாணவர்களே முன்வரவேண்டும் என்று  முடிவெடுத்து  எங்களுக்கு கிடைத்த வெளிச்சம் மற்ற மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக,  எந்த மாணவர்களும் எந்த காரணத்திற்காகவும்  படிப்பை இழக்கும் சூழலுக்கு ஆளாகி விடக்கூடாது. என்பதற்காக மாணவர்கள் ஆலோசனை மையம் (Students  Help Line) 9698151515 ஆரமித்து.  தமிழகம் முழுவதும் கடந்த 15.07.2010 முதல் 5.09.2010 வரை    55 நாட்களாக பிரச்சாரப்பயணமாக மேற்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறோம். அதன்மூலம் இது நாள் வரை 26000 க்கும் மேற்பட்ட தொலைப்பேசி அழைப்புகளை சந்தித்து மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்கைக்கு ஆலோசனைகளும் உதவிகளும் செய்து வருகிறோம். Students Help Line ல் தொடர்பு கொண்டவர்களில் 224 மாணவர்கள் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத சூழலில் அவர்களின் படிப்பை இழக்கும் சூழலில் இருக்கிறார்கள். கல்லூரிக்கட்டணம் செலுத்தாததால் அவர்கள் பல்வேறுவிதமான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அவர்களின் கல்விக்கு உதவிட உங்கள் முன் நிற்கிறோம்.. உங்கள் பங்களிப்பு எங்களை போன்ற மாணவர்களின்  தலையெழுத்தை மாற்றும் என்கிற நம்பிக்கையில்…

வெளிச்சம் மாணவர்கள்

வெளிச்சம் மாணவர்களின் வங்கி கணக்கு விபரம்: 



ACCOUNT NAME:               ” VELICHAM STUDENTS EDUCATIONAL AND WELFARE TRUST 
ACCOUNT NO:                   31654850476,
Branch Name:                     STATE BANK OF IINDIA, PERAMBUR, CHENNAI,
IFSC Code:                          SBIN 0002256
SWIFT Code:                       SBININBB458

Email: velicham.students@gmail.com, 

Phone: STUDENTS HELP LINE -9698151515
Web;  www.velicham.org
http://velichamstudents.blogspot.com


உதவி செய்பவர்கள்velicham.students@gmail.com இந்த மெயிலுக்கு தகவல் அனுப்பவும்..அல்லது கல்லூரிக்கே டி.டி. கொடுக்கலாம்..

நன்கொடைகளுக்கு இந்திய வருமான வரிச்சட்டத்தின் கீழ் வருமானவரி தள்ளுபடி 80G பெறப்பட்டுள்ளது .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: